நகரி தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை ரோஜாவுக்கு முக்கிய பொறுப்பு..!

share on:
Classic

ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏ., வாக தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகை ரோஜா நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராகவும், 25 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். எனினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. 

இதையடுத்து, ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் முக்கிய துறையான, தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind