அதானி நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு அனுமதி...ஆஸ்திரேலியாவில் வெடித்தது போரட்டம்...!

share on:
Classic

இந்திய நிறுவனமான அதானியின் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதானி நிறுவனத்தின் இந்த திட்டம் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குயின்ஸ்லாந்தில் கலீலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிலக்கரி எடுக்க ஆஸ்திரேலிய மாகான அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் போரட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதானி குழுமத்தின் இந்த திட்டத்தால் சுற்றுசூழலுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் வரும் என்பது தெளிவாக தெரியவில்லை என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.    

தொடக்கத்தில் இந்த திட்டதின் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், இது உலகின் மிகப்பெரிய சுரங்கமாக இருக்கும் என்றும் அதானி உறுதியளித்தார். ஆனால் நினைத்த வேகத்தில் இத்திட்டம் நிறைவேறாமால் போனதால், இப்போது 1000 பேர் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து குயின்ஸ்லாந்தில் நிலக்கரி எடுக்க பிற 6 நிலக்கரி நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்கிவிடுமோ என்று சுற்றுசூழல் ஆய்வாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

Vijayshanthi