தமிழகத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்

share on:
Classic

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் பாலாஜி மற்றும் ராஜாராமன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்தநிலையில், தமிழக அரசு புதிதாக 2 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. பாலாஜி மற்றும் ராஜாராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியனாதன் வெளியிட்டுள்ளார். பாலாஜி பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராகவும், ராஜாராமன் மருத்துவப் பணிகள் தேர்வாணையத்துறை தலைவராகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind