கிரீஸ் டப்பாவ எப்படி ஒதச்ச...!

share on:
Classic

அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது. 

முதல் நாள் ஆட்டம்:
நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய 2-ஆம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முகமது ஷமி 6 ரன்களில் ஆட்டமிழக்க, 250 ஸ்கோருடன் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவிற்கு வந்தது. இந்திய பேட்டிங் தரப்பில் அதிகபட்சமாக புஜாரா 123 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சுத் தரப்பில் ஹேஸல்வுட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ்:
இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசையை ஒருவழியாக கட்டுப்படுத்திய ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸை இன்று தொடங்கியது. போட்டி ஆரம்பித்த  முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஃபிஞ்ச் 'டக்-அவுட்' ஆனார். இவரைத்தொடர்ந்து, ஹாரிஸ் 26 ரன்களிலும், மார்ஷ் 2 ரன்களிலும், குவாஜா 28 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், ஸ்கோர் 87 ரன்களை எட்டுவதற்குள் 4 விக்கெட்டுகள் இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதன்பின் களமிறங்கிய ஹாண்ட்ஸ்கோம் (34 ரன்கள்) , பெயின் (5 ரன்கள்), கம்மின்ஸ் (10 ரன்கள்) ஆகியோரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் நோக்கி நடையைக் கட்ட, ஆஸ்திரேலிய அணியின் தடுமாற்றம் உச்சகட்டத்தை அடைந்தது. 

2-ஆம் நாள் ஆட்டம் முடிவு:
இன்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சுத் தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி தற்போது 59 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியிடம் 3 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 3-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. 
 

News Counter: 
100
Loading...

mayakumar