புதுச்சேரியில் அரசு பொறியியல், கலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

share on:
Classic

புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டில் பெறப்பட்ட பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 

புதுச்சேரியில் 2019 - 20 ஆம் கல்வியாண்டில் இளநிலை படிப்புகளுக்கு  சென்டாக் அமைப்பின் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி இந்தாண்டும் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாடப்பிரிவுகளுக்கு ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் இன்று முதல் வரும் 25 ஆம் வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜூன் 7ம் தேதி  முழு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும், இதில் மாணவர்கள் தங்களது விருப்பப்படி பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் செண்டாக் அமைப்பின் தலைவர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind