4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 21ம் தேதி விருப்பமனு விநியோகம் - அதிமுக அறிவிப்பு

share on:
Classic

4 தொகுதி சட்டமன்றத் தொகுதி  இடைத்தேர்தலில் 21ம் தேதி விருப்பமனு  விநியோகம் செய்யப்படும் என அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

சூலூர் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக, ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதியில் போட்டியிட விரும்புவோர், வரும் 21ம் தேதி விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவித்துள்ளனர். 

காலை 10 மணிமுதல் 5 மணிவரை விரும்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என்றும், 25,000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

Ragavan