நாளை அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல்

share on:
Classic

அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் மற்றும் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், அதி.மு.க.வில் திருவாரூர் தொகுதிக்கு ஏற்கெனவே விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 17 தொகுதிகளுக்கும் விருப்ப மனுத்தாக்கல் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இடைத்தேர்தலுக்கான நேர்காணல் நாளை நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev