தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக அதிமுக ஆலோசனை

share on:
Classic

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகளை அடையாளும் காண்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பா.ஜ.க. சார்பில், தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் மற்றும் பா.ம.க., புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் தொகுதிகளை அடையாளும் காண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதாகவும், விரைவில் அ.தி.மு.க. தலைமை இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

vinoth