இரவில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு அதிமுக பணப்பட்டுவாடா : தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு..!

share on:
Classic

அதிமுகவினர் இரவு நேரங்களில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக தென்சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாளையுடன் தமிழகத்தின் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற உள்ள நிலையில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், சைதாப்பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஆளும் கட்சியான அதிமுக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது” என குற்றம்சாட்டினார். மேலும் “இரவு நேரத்தில் செயற்கையான மின்வெட்டை உருவாக்கி, அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுகிறது, இதை ஏற்றுக்கொண்டு ஏமாந்தால் தமிழகம் நிரந்தரமாக இருளில் மூழ்கிவிடும்” என்றும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan