தேனியில் பணப்பட்டுவாடா ஜோர்..! வாக்குக்கு ரூ.1000..!

share on:
Classic

தேனியில் ஒரு ஓட்டுக்கு ரூ. 1,000 என அதிமுகவின் பணப்பட்டுவாடா அமோகமாக நடைபெற்று வருகிறது.

பணப்பட்டுவாடாவை தடுக்கும் முனைப்பில் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் ஆவணங்கள் இன்றி பணம் முதல் செய்யப்பட்ட இடத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு வாக்களிக்குமாறு பணப்பட்டுவாடா நடக்கும் காணொலிக் காட்சி வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் அதிமுகவைச் சேர்ந்த எக்ஸ் சேர்மன் சபிதா அருண் பிரசாத் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறி ஒரு வாக்குக்கு ரூ. 1,000 என்பதன் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்துள்ளார். பணப்பட்டுவாடாவை எளிதாக்கும் வகையில் அந்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பது, மின்சாரத் துறை மீதும் சந்தேகத்தை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan