நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

share on:
Classic

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அதிமுக தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் வெல்லும் முனைப்பில், தேர்தல் பணிகளில் அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே, தொகுதிப்பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டவற்றுக்கு குழு அமைத்துள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகமும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மக்களவைத் தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind