அதிமுக அரசு பதவியை தக்கவைக்கவே யாகம் நடத்துகிறது - ஸ்டாலின்

share on:
Classic

அதிமுக அமைச்சர்கள் மழைக்காக யாகம் நடத்தவில்லை எனவும் பதவியை தக்கவைத்துக் கொள்ளவே யாகம் நடத்துகிறார்கள் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இந்த தட்டுபாட்டை போக்குவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் இதில் கலந்து கொண்ட திமுக தொண்டர்கள் குடம் இங்கே தண்ணீர் எங்கே என்ற வாசகம் பொறித்த காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அமைச்சர்கள் மழைக்காக யாகம் நடத்தவில்லை எனவும் பதவியை தக்கவைத்துக் கொள்ளவே யாகம் நடத்துகிறார்கள் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

அதேபோல், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய சென்னைத் தொகுதி எம்.பி தயாநிதி மாறன், தமிழகத்தில் போதிய மழை பெய்யாதது அதிமுக குற்றமில்லை எனவும் ஆனால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவராதது அதிமுக செய்த மிகப் பெரிய குற்றம் எனவும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan