அதிமுக தேர்தல் அறிக்கை தயார்..!

share on:
Classic

அதிமுக தேர்தல் அறிக்கை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக அமைப்பு செயலாளர்களான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாதமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இதற்காக தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்னைகளை அறிந்து அதனை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கை சரிபார்க்கப்பட்டு, பின்னர் முறையாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்.

 

News Counter: 
100
Loading...

sajeev