அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்றியுள்ளது - மு.க. ஸ்டாலின்

share on:
Classic

அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்றியுள்ளதாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், இந்தியாவில் முழுவதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் தமிழகத்தில் தேனி நீங்கலாக மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர் “ அதிமுகவின் கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்தின் 30% வாக்குகளை அதிமுகவிடமிருந்து திமுக கைப்பற்றியுள்ளது. மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, ஆளுங்கட்சிக்கு எப்படி மரண அடி கொடுத்திருக்கிறோமோ, இனி எந்த தேர்தல் வந்தாலும், மீண்டும் மரண அடி கொடுப்போம். விரைவில் சந்திக்க இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் அல்லது சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் அதனை நிரூபித்து காட்டுவோம். மக்களுக்கு எதிரான திட்டங்களான ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழி சாலை திட்டம் போன்றவற்றை செயல்படுத்த அதிமுக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

Ramya