4 தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் பழனிசாமியின் பிரசார தேதிகள் அறிவிப்பு..!

share on:
Classic

நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள பிரசார சுற்றுப்பயண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், வரும் மே மாதம் 1-ஆம் தேதி சூலூர் தொகுதியிலும், மே 5-ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், மே 6-ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், மே 7-ஆம் தேதி ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வரும் 11-ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 12-ஆம் தேதி ஒட்டப்பிடாரம் தொகுதியிலும், 13-ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், 14-ஆம் தேதி சூலூர் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan