நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு

Classic

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு அளிப்பதற்கு 14-ந்தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளை அ.தி.மு.க. மேற்கொண்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து கடந்த 4-ந்தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனுக்களை வாங்கி சென்று, பூர்த்தி செய்து சமர்பித்தனர்.  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், தற்போதைய அ.தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்தனர். விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அ.தி.மு.க.வில் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind