சாதியம் எப்போது ஒழிகிறதோ அப்போது தான் நீதி நிலைநாட்டப்படும் - மக்களவையில் கலக்கிய தம்பிதுரை

share on:
Classic

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வருமானத்தில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கான 10 விழுகாடு இட ஒதுக்கீட்டை அதிமுக எம்பி தம்பிதுரை கடுமையாக எதிர்த்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும்.

அதன்படி ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சத்துக்கு குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் பொதுப்பிரிவினர் இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவையில் பேசிய அவர், சமூகத்தில் பின் தங்கியவர்களுக்காக கொண்டுவரப்பட்டது தான் இட ஒதுக்கீடு என்றும், நாட்டிலுள்ள சாதி வேறுபாடுகளை களைவதே மக்களின் முன்னேற்றத்திற்கு நிரந்தர வழி வகுக்கும் எனக் கூறினர். மேலும் தமிழகத்தில் உள்ள இட ஒதுக்கீட்டை போல நாடு முழுக்க இட ஒதுக்கீட்டை 69 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

News Counter: 
100
Loading...

sasikanth