"83 ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்த மேட்டூர் அணையை தூர்வாரியது அதிமுக அரசு தான்"

share on:
Classic

83 ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்த மேட்டூர் அணையை தூர்வாரியது அதிமுக அரசு தான் என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக கூட்டணி கட்சி சார்பாக தேர்தல் பிரசாரக் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ராமதாஸ் ஆகியோர் பங்கேற்று அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, "83 ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்த மேட்டூர் அணையை தூர்வாரியது அதிமுக அரசு தான்" என்று தெரிவித்தார். மேலும், "தலைவாசல் அருகே ஆசியாவிலேயே மிக பெரிய கால்நடை ஆராய்சி மையம் அமைக்கப்படும்" என்றும், "இன்னும் 2 ஆண்டுகளில் சேலம் மாநகரம் நவீன மாநகரமாக மாறும்" என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு பலிக்காது, அது வெறும் பகல் கனவு தான்" என்றும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan