அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்..!

share on:
Classic

அதிமுக சார்பில் 4 தொகுதி சட்டமன்றத இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.

சூலூர் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக, ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையின் படி, இன்று விருப்ப மனுக்களை விநியோகிப்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி மனுக்களை பெற்று இன்றே பூர்த்தி செய்து கொடுக்கவும் வேண்டுமென அதிமுகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

News Counter: 
100
Loading...

vinoth