பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுகவுக்கு மிரட்டலா?? பாஜக பதிலடி..

share on:
Classic

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அக்கட்சியை மிரட்டி கூட்டணிக்கு பணியவைத்துள்ளதாக திமுக குற்றம்சாட்டிய நிலையில், பாஜக அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.

கிருஷ்ணகிரியில் ஒரு திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பாஜக தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், முதலில் அதிமுக அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், ஆனால் மோடி அதிமுகவை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், கூட்டணி வைக்கவில்லை என்றால், குட்கா ஊழல், எடப்பாடி வழக்கு, 11 எம்.எல்.ஏக்கள் வழக்கு ஆகியவற்றை வைத்து பழிவாங்குவோம் என்று பாஜவினர் கூறிவருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயாராகிவிட்டது எனவும், ஆனால் தற்போதைக்கு 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வேண்டாம் என்று அதிமுக கேட்டுக்கொண்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந்நிலையில் இது குறித்து, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசிய போது, அரசியல் பற்றி தெரியாதவர்கள் வேண்டுமானல் இது போல போல பேசலாம் என்று தெரிவித்தார்.

மேலும் சிறிய கட்சியோ அல்லது பெரிய கட்சியோ, அந்த கட்சிகளுக்கு சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ உறுப்பினர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களை மிரட்டி கூட்டணிக்கு பணிய வைக்க முடியாது என்று திமுகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் கட்சிகளுக்கென்று சுயமரியாதை இருக்கிறது எனவும், தலைவர்கள் இருக்கிறார்கள் என்றும் இல.கணேசன் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya