close
முகப்பு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகர் ராஜினாமா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகர் ராஜினாமா

 டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகர் ராஜினாமா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகரான வி.கே.ஜெயின் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தனது வாக்குமூலத்தை மாற்றிப் பேசுவதற்கு முதலமைச்சரின் உதவியாளரான வி.கே. ஜெயினுக்கு நெருக்கடி அளித்தது யார் என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியது. 

ஆனாலும், கெஜ்ரிவாலின் ஆலோசகரான வி.கே.ஜெயினிடம் போலீஸ் விசாரணை நடத்தியது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகரான வி.கே.ஜெயின் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.