28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் சந்தோஷ் சிவன்!!

share on:
Classic

ரஜினி - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாக உள்ள அடுத்த படத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

ரஜினியின் பேட்ட படம் அவரது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பேட்ட படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது. லைகா ப்ரொக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. ஏற்கனவே லைகா ப்ரொட்க்‌ஷ்னஸ் தயாரித்த 2.0 திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலிக்காததால், அதனை ஈடுகட்ட இந்தப் படத்தில் ரஜினி சம்பளம் இல்லாமல் நடிக்கிறார் என்ற தகவலும் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் பேட்ட படத்தில் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸுடன் துப்பாகி, ஸ்பைடர் ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் பணியாற்றிய சந்தோஷ் சிவன் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya