28 வருடங்களுக்கு பின் வெங்கடேஷுடன் நடிக்கும் தபு..!!

share on:
Classic

28 வருடங்களுக்கு பின் வெங்கடேஷுடன் நடிக்கும் தபு இப்போது தெலுங்கு படத்தில் தோன்றவுள்ளார்

’காதல் தேசம்’ படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் பாலிவுட் நடிகை தபு, இந்த படத்தின் மாஸ் ஹிட்டிற்குபிறகு, இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே போன்ற படங்களில் நடித்து உள்ளார். பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி வந்த தபு இப்போது தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார்.  

பாலிவுட் படமான ’தி தி பியார் தி’ படம் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட் கொடுத்தது. அஜய் தேவன் ஹீரோவாக நடித்து இருந்த இந்த படத்தில் ரகுல்ப்ரீதி சிங் மற்றும் தபு ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.

இப்போது இந்த படத்தை தெலுங்கில் சுரேஷ் பாபு எடுக்க இருக்கின்றார். இதில் ரகுல்ப்ரீதி சிங் மற்றும் தபு தெலுங்கு வெர்சனில் நடிக்க இருக்கின்றார், மேலும் ஹீரோவாக வெங்கடேஷ் நடிக்க உள்ளார். வெங்கடேஷ்-சும் தபுவும் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடியாக நடிக்க உள்ளார். இதற்கு முன்னதாக ’கூலி நம்பர் 1’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan