மே 23-க்கு பிறகு திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் : ஸ்டாலின் உறுதி..

share on:
Classic

மே 23 க்குப் பிறகு பெரும்பான்மை பலத்தோடு திமுக ஆட்சி அமைக்கும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுடன், தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இன்றுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சூலூர் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருகூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி மே 23 ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் என்றார். தேர்தல் முடிவுக்குப் பிறகு பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya