திருமணத்திற்கு பின் வேறொரு நபருடன் ஓடிய பெண் : கிராம மக்கள் வினோத தண்டனை..!!

share on:
Classic

திருமணத்திற்கு பின் வேறு நபரை காதலித்து அவருடன் ஓடிய பெண்ணுக்கு மத்திய பிரதேசத்தில் வினோத தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா என்ற பழங்குடியன கிராமத்தில் திருமணமான பெண் ஒருவர் தான் காதலித்த வேறு நபருடன் குஜராத்திற்கு ஓடிப்போய் உள்ளார். 2 நாட்களுக்கு முன் அந்தப் பெண்ணை கண்டுபிடித்த உறவினர்கள் அவரை கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர். தங்கள் கிராமத்தை அவமானப்படுத்திவிட்டதாக அவருக்கு வினோதமான தண்டனையை அந்த கிராமப் பஞ்சாயத்து வழங்கியது. அவரின் கணவரை தோளில் சுமந்து கிராமத்தை சுற்றி வர வேண்டும் என்பது தான் அந்த தண்டனை. அந்த பெண் தன் கணவரை சுமந்து சுற்றி வரும் போது பலர் அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 12 பேரை கைது செய்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ramya