ராயல்டி விவகாரம் : 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் இளையராஜா - எஸ்.பி.பி..??

share on:
Classic

ராயல்டி விவவாரத்திற்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு பின் இசைஞானி இளையராஜா மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டு தனது பாடல்களை மேடைகளில் பாடினால், அதற்கான ராயல்டி தொகையை கொடுக்க வேண்டும் என்று எஸ்.பி.பி., சித்ரா, எஸ்.பி. சரண் ஆகியோருக்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக இசைஞானி, எஸ்.பி.பி ஆகிய இருவரிடையே இருந்த வந்த நட்பு முறிந்தது. இதன் விளைவாக நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியில் கூட எஸ்.பி.பி கலந்துகொள்ளவில்லை. 

இந்நிலையில் வரும் ஜூன் 2-ம் தேதி,  ராஜாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் மிகப்பெரிய விரிசலுக்கு பிறகு முதன்முறையாக இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இது அமையும். இவிபி பிலிம் சிட்டியில் (EVP Film City) நடைபெற உள்ள இந்நிகழ்ச்ச்யில் பாடகர்கள் கே.ஜே யேசுதாஸ், சித்ரா, மனோ உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

News Counter: 
100
Loading...

Ramya