தவறுதலாக பாஜகவிற்கு வாக்களித்ததால், தன் விரலை வெட்டிய இளைஞர்..!!

share on:
Classic

பாஜகவுக்கு தவறுவதலாக ஓட்டு போட்டதால் தலித் இளைஞர் ஒருவர் தனது விரலை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பவன் குமார் என்ற 25 வயது தலித் இளைஞர் உத்திரப்பிரதேச மாநிலம் அப்துல்லாபூர் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று அம்மாநிலத்தில் புலந்த்ஷஹர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க சென்றுள்ளார். அவர் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி - ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி வேட்பாளர் யோகேஷ் வர்மாவுக்கு வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால் கவனக்குறைவு காரணமாக, தற்போது சிட்டிங் எம்.பியாக உள்ள பாஜக வேட்பாளர் போலா சிங்கிற்கு வாக்களித்துவிட்டார். இதனால் பவன் குமார் தனது விரலை கத்தியால் வெட்டியுள்ளார். பின்னர் இது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டார். தான் செய்த தவறுக்காக வருந்தி தன் விரலை வெட்டியதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.  

News Counter: 
100
Loading...

Ramya