வேலூர் மக்களவைத் தொகுதியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை..!

share on:
Classic

வேலூர் மக்களவை தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் வேலூரில் துரைமுருகன் வீட்டிலும், அவரது மகனும், திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதேபோல், மற்றொரு திமுக பிரமுகரின் சிமெண்ட் குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் வரும் ஆகஸ்டு 5-ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் புதுவசூரில் உள்ள திமுக பிரமுகர் ஏழுமலை என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனையில், சுமார் 28 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind