தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை

share on:
Classic

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. 

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 74 ரூபாய் 32 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டீசல் 27 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு 70 ரூபாய் 59 காசுகளாக விற்கப்படுகிறது. இதுதொடர்பாக வாகனஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த விலை ஏற்றம் குறித்து, வாகன ஓட்டிகள் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev