அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகருக்கு 5 நாள் சி.பி.ஐ. காவல்

Classic

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெலை 5 நாள் சி.பி.ஐ. காவலில் எடுத்துவிசாரிக்க டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்தவரான கிறிஸ்டியன் மிஷெல், இந்த வழக்கு தொடர்பாக துபாயிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டுவரப்பட்டார். தொடர்ந்து, டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற காவலில் அனுப்ப வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அதேநேரம், சி.பி.ஐ. தரப்பில் 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. முடிவில்,  கிறிஸ்டியன் மிஷெலை 5 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். இந்த விசாரணை முடிந்து, வரும் 10ம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

News Counter: 
100
Loading...

sasikanth