ஊழலால் தான் அதிமுக வென்றது..மக்களவையில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு..!

share on:
Classic

ஊழலால் தான் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாக திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் தெரிவித்தார். 

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த கடந்த 20ம் தேதி உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மக்களவையில்,  நடைபெற்ற விவாதத்தில் பேசிய மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக கொண்டு வந்ததாக தெரிவித்தார். 

இந்த திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தாலே தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,  ஊழலால் தான் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசை ஊழல் அரசு என கூறிய வார்த்தையை நீக்க பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது.  இது தமிழ்நாடு மேடையல்ல, நாடாளுமன்றம் என்பதை தயாநிதி மாறன் உணர வேண்டும் எனவும் பாஜக எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால், மக்களவையில் திமுக - பாஜக இடையே அமளி ஏற்பட்டது.
 

News Counter: 
100
Loading...

aravind