மம்தா பானர்ஜிக்கு காலக்கெடு விதித்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

share on:
Classic

மேற்கு வங்க அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க தலைவர் கொல்கத்தாவில் நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கோபமடைந்த உறவினர்கள், மருத்துவர்கள் 2 பேரை தாக்கினர். இதை கண்டித்து நாடு முழுவதும் ஒருவாரமாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வேலைநிறுத்தம் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படுவதால் பணிக்கு திரும்ப மருத்துவர்களை அரசு வலியுறுத்தி வருகிறது. 

இந்தநிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்புக் கோர வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை மருத்துவர்கள் முன்வைத்துள்ளனர். 48 மணி நேரத்தில் மம்தா, மன்னிப்பு கேட்காவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind