தமிழகத்தில் 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் - மத்திய அரசு உறுதி

share on:
Classic

மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு வழங்கிய 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும், நிதி ஒதுக்க வேண்டும் எனக்கோரி கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதிக்குழு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. நிதிக்குழு ஒப்புதலுக்கு பின் மத்திய அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என்றும், அமைச்சரவை அனுமதி அளித்த 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு முழு பயன்பாட்டிற்கு வரும் என்றும் பதிலளித்துள்ளது. இதை ஏற்ற நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

News Counter: 
100
Loading...

sasikanth