நீங்க மேஷ ராசியா? கண்டிப்பாக உங்களுக்கு இந்த பலன் பயன்படும்...

share on:
Classic

ஐப்பசி மாத பலன்கள்:

மேஷ ராசி: அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்

குருபகவான் 7 ஆம் இடத்தில் இருப்பதால் கொஞ்சம் சிறப்பான பலன்களைத் தருவார். பணவரவு அதிகமாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கேது 8 ஆம் இடத்தில் இருப்பதால் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்லவும்.கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.புதிய பொருட்களை வாங்குவீர்கள்..

சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் பல்வேறு ஆதாயங்கள் ஏற்படும். இந்த ஐப்பசி மாதத்தில் பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை.குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே பல்வேறு  கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்ல வேண்டும். நவம்பவர் 15ஆம் தேதிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். பிள்ளைகள் உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். தூரத்து உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள்.

மகிழ்ச்சியான சந்திப்புகள் நிகழும். வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில்  எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் உறவினர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு புதிய உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்

News Counter: 
100
Loading...

janani