பாகிஸ்தான் தடையால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.300 கோடி இழப்பு..!

share on:
Classic

தங்கள் நாட்டு பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் விதித்துள்ள தடையால் ரூ. 300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்திய விமானங்கள் அந்நாட்டு வான் பகுதியில் பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால், ஏர் இந்தியா நிறுவனம் தனது நிறுவனங்களை சுற்றுவட்டப்பாதையில் இயக்கி வருகிறது. இதனால், ரூ. 300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடமும் முறையிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan