இன்று உலக மகளிர் தினம்..பெண் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த Air India..!

share on:
Classic

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு முழுக்க முழுக்க பெண்களே விமானத்தை இயக்க ஏர்இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தை விமானி கேப்டன் தீபா தலைமையிலான பணிப்பெண்கள் கொண்டகுழு இயக்குகிறது. சென்னையில் இருந்து இந்த குழுவினர் டெல்லி சென்றுவிட்டு மீண்டும் பகல் 12.50 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்புகின்றனர். 

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று ஏர் இந்தியா நிறுவனம் 52 விமானங்களை பெண்களே இயக்குவார்கள் என அறிவித்துள்ளது. நியூயார்க், வாஷிங்டன், லண்டன் உட்பட 12 சர்வதேச விமானங்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களை பெண்கள் இயக்க உள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev