கடன் சுமையால் பிளாட்களை விற்கும் ஏர் இந்தியா நிறுவனம்..!!

share on:
Classic

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அளவுக்கு அதிகமான கடன் இருப்பதால் அதனை அடைக்க அந்நிறுவனத்துக்கு சொந்தமான 3 பிளாட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா நிறுவனமானது கடன் சுமையால் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. செலவை குறைக்கும் விதமாக பைலட்டுகள் இனி யாரும் ஸ்பெஷல் மீல்ஸ் கேட்கக்கூடாது என இந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலும் பைலட்டுகள் அதிக விலையுள்ள ஸ்பெஷல் மீல்ஸ் மட்டுமே சாப்பிட்டு வந்தனர்.

இதனால் கடன் அதிகரிப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி பைலட்டுகளுக்கு சாதாரண உணவு மட்டுமே வழங்க வேண்டும் என்ற உத்தரவை கேட்டரிங் நிறுவனத்திற்கு போடப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஏர் இந்தியா கேப்டன் அமிதாப் சிங் பைலட்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில், பைலட்கள் ஸ்பெஷல் சாப்பாடு கேட்கக்கூடாது.

சாதாரண சாப்பாடு மட்டும் தான் ஆர்டர் செய்ய வேண்டும். அப்படி ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிடுவதாக இருந்தால் டாக்டர்கள் பரிந்துரை இருந்தால் மட்டுமே, அதன் அடிப்படையில் ஸ்பெஷல் சாப்பாடு ஆர்டர் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மேலும் கடன் சுமையை குறைக்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான 3 பிளாட்டுகளை மகாராஷ்டிரா அரசுக்கு விற்பனை செய்துள்ளது.

இந்த பிளாட்டுகள் அதிக தொகை என்பதால் யாரும் வாங்க முன்வராத நிலையில் மகாராஷ்டிரா ஏ.ஜி அலுவலகம் 127.50 சதுர மீட்டர் கொண்ட இந்த 3 பிளாட்டுகளையும் ரூ.24.33 கோடிக்கு வாங்கியுள்ளது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan