சிரியாவில் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் : ஐ.நா கடும் கண்டனம்..

share on:
Classic

சிரியாவில் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சிரியாவில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டம், உள்நாட்டு போராக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறை சம்பவங்களாக மாறத் தொடங்கின. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீடு  காரணமாக, உள்நாட்டுப் போர் தற்போது 9-ம் ஆண்டை எட்டியுள்ளது. இதுவரை அந்த போரில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி லட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் சிரியாவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில், வான்வழி தாக்குதல் நடைபெற்றது. அதில் ஒரு ஆம்புலன்ஸ் மையம், 2 மருத்துவமனைகள் மற்றும் ஒரு கிளினிக் உட்பட பல்வேறு மருத்துவ குழுக்களின் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் அண்டானியோ கட்ரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் “ மருத்துவ வசதிகள் உட்பட குடிமக்களின் உட்கட்டமைப்பு வசதிகளும், மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். போரில் ஈடுபட்டுள்ளவர்கள் சர்வதேச மனிதநேய சட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும். தாக்குதலுக்கு காரணமானவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே மேற்கத்திய நாடுகள் தான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக வான்வழி தாக்குதல்களுக்கு ரஷ்யா தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ள ரஷ்யா, தீவிரவாதிகளை அகற்றுவது மட்டுமே தங்கள் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது. 

News Counter: 
100
Loading...

Ramya