ஏர்டெல் கனவு பலிக்குமா?... வாடிக்கையாளர்களுக்காக 4G & 5G சேவை

share on:
Classic

4G மற்றும் 5G சேவைக்காக ரூ. 56,000 கோடியை ஏர்டெல் நிறுவனம் செலவு செய்ய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

ஜியோ Vs. ஏர்டெல்:
இந்திய தொலைதொடர்பு சேவைத்துறையில் ஜியோ நுழைந்ததன் பிறகு ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் லாபக்கனவுகள் தவிடுபொடியாகின. ஜியோவுடனான இந்த தொலைதொடர்பு போட்டியை சமாளிப்பதற்கு தங்களது சேவைத்தரங்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியை அனைத்து நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன. இதனொரு பகுதியாக, 4G மற்றும் 5G சேவையை மேம்படுத்துவதிலும், அவற்றை கைப்பற்றுவதிலும் பலத்த போட்டி நிலவுகின்றது. 

ரேஸில் வெல்லப்போவது யார்?...
4G மற்றும் 5G சேவைக்காக அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ரூ. 56,000 கோடி அளவிற்கு ஏர்டெல் நிறுவனம் செலவு செய்ய வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் கணித்துள்ளனர். பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் ஏற்கனவே இருக்கும் 4G சேவையை விரிவாக்கம் செய்வதற்கும், புதிதாக அறிமுகமாகவுள்ள 5G சேவையை கைப்பற்றுவதற்கும் வலுவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4G சேவைத்தர விரிவாக்கத்திற்காக ரூ. 21,000 கோடியும், 5G சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஏலத்தைக் கைப்பற்ற ரூ. 35,000 கோடி ரூபாயும் என மொத்தம் ரூ. 56,000 கோடியை ஏர்டெல் நிறுவனம் செலவு செய்ய காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. 

ஏர்டெல் பகல் கனவு:
5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தை எப்படியாவது கைப்பற்றி விடலாம் என ஏர்டெல் கனவுக்கோட்டை கட்டியிருந்தாலும் மத்திய அரசு ஏலத்தொகையை குறைத்தால் மட்டுமே அந்நிறுவனம் முன்வந்து ஏலத்தில் கலந்துகொள்ளும். இல்லாவிட்டால் 5G ஏலத்தில் வெற்றி பெறுவதென்பது ஏர்டெல் நிறுவனத்தால் முடியாத காரியமாகவே மாறிவிடும். முன்னதாக, நேற்றைய நாளுக்கான மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் ஏர்டெல் நிறுவன பங்கின் விலை 0.1% உயர்ந்து ரூ. 353-ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar