ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இனி கூடுதல் 'டேட்டா'

share on:
Classic

மாற்றியமைக்கப்பட்ட ப்ரீபெயிட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களை சந்திக்கிறது ஏர்டெல்.
 
தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மாறி மாறி ஆஃபர்களை கொடுக்க வைத்துள்ளது. தங்களுடைய சந்தாதார்களை தக்க வைத்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது ஜியோ அல்லாத நிறுவனங்கள். இதில் குறிப்பாக ஏர்டெல், வோடோபோன் போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை அளிக்கிறது. 

ஏர்டெல் தன்னுடைய ரூ.448 ப்ரீபெயிட் திட்டத்தில் முன்பு 1ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு கொடுத்தது. தற்சமயம் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இனி ரூ.448 திட்டத்தில் 1.5ஜிபி டேட்டா வீதம் 82 நாட்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ், கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஏர்டெல் ரூ.399 ப்ரீபெயிட் திட்டத்தில் இதற்குமுன்பு 1ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு வழங்கியது. இனி 1ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திலும் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 

News Counter: 
100
Loading...

aravind