ஏர்டெல்+வோடஃபோன்+ஐடியா Vs. ஜியோ

Classic

ஏர்டெல், வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் இணையவிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. 

2.0 எஃபெக்ட்:
'எந்திரன் 2.0' படம் ரிலீஸானதில் இருந்தே செல்ஃபோன் சிக்னல்கள் மீதும், செல்ஃபோன் கோபுரங்கள் மீதும் மக்களின் பார்வை திரும்பியுள்ளது. அதிக அலைவரிசைகளைக் கொண்ட சிக்னல் கோபுரங்கள் பறவைகளுக்கு எமனாக திகழ்கிறது என்பது படத்தில் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தொலைதொடர்பு நிறுவனங்களை சந்தேகக் கண்ணில் பார்க்க ஆரம்பித்துள்ளனர் வாடிக்கையாளர்கள்.

ஏர்டெல் சேவைத்தரம்:
அண்மைக்காலமாகவே, ஏர்டெல் நிறுவன சிக்னலில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாகவும், பழையபடி இடைநிறுத்தம் இல்லாத செல்ஃபோன் அழைப்புகள் தற்போது இல்லை என்பதும் வாடிக்கையாளர்களின் ஆதங்கக் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஏர்டெல், வோடஃபோன், ஐடியோ உள்ளிட்ட 3 நிறுவனங்களும் இணைந்து செயல்பட வாய்ப்பிருப்பதாக பரபரப்புத் தகவல் கசிந்துள்ளது. சிக்னல் பிரச்னைகளை சமாளிப்பதற்காக இந்த அதிரடி முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வோடஃபோனும் ஐடியாவும் ஏற்கனவே கைகோர்த்துள்ளதால் ஏர்டெல்லின் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கின்றன. 

இது ஒருபுறமிருக்க, இந்த 3 தொலைதொடர்பு நிறுவனங்களின் நோக்கமும் ரிலையன்ஸ் ஜியோ-வை வீழ்த்துவதே என வர்த்தக உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. ஜியோ நிறுவன தொலைதொடர்பு சேவையை மேம்பட்டதாக வெளி உலகிற்கு காட்டுவதற்காகவே மற்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் சிக்னல்கள் வேண்டுமென்றே தடை செய்யப்படுவதாக ஒரு சாரார் குற்றம்சாட்டுகின்றனர். இன்னொரு பக்கம் பார்த்தால், '4ஜி வோல்ட்' சேவை அப்டேட் செய்யப்படும் வரை சிக்னல் பிரச்னை தொடரும் என ஏர்டெல் நிறுவன ஊழியர்கள் விளக்கம் அளித்து வருகின்றன. இதில் எது உண்மை என்பதில் மட்டும் இன்னும் தெளிவான புரிதல் கிடைத்தபாடில்லை. 
 

News Counter: 
100
Loading...

mayakumar