மணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் : குருவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி எனவும் கருத்து..!!

share on:
Classic

மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யா ராய் உறுதி செய்துள்ளார். 

சோழ வரலாற்றை அடிப்படையாக கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்ற ஆசைப்படாதவர்களே இல்லை என்று சொல்லலாம். எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை அனைத்து முன்னணி திரையுலக நட்சத்திரங்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டனர். இயக்குனர் மணிரத்னமும் தனது தனது நீண்ட நாள் கனவுப்படமான பொன்னியின் செல்வனை இயக்கும் ஏற்கனவே ஈடுபட்டாலும் கூட, பல்வேறு காரணங்களால் அது தடைபட்டது. தற்போது மீண்டும் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. படத்தின் பீரி-ப்ரொடெக்‌ஷ்ன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், தெலுங்கு நடிகர் மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் படத்தில் நடித்து வருவதை உறுதி செய்துள்ளார்.

அண்மையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இது தொடர்பாக பேசிய அவர் “ மணிரத்னம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத போது, இந்த செய்தி வெளியில் கசிந்து விட்டது. அவர் படத்தில் நான் வேலை செய்வது உண்மை தான். என் குருவுடன் வேலை செய்வதில் எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி தான். நான் உற்சாகமாக, ஆர்வமாக, மகிழ்ச்சியுடன் பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya