பாலிவுட் செல்லும் அஜித்...ரசிகர்கள் கொண்டாட்டம்....!

share on:
Classic

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூர்!

கோலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவரா இருக்குறவர் தான் அஜித்.  இவர் நடித்த விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்துல் நடிச்சிருக்காரு. இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்த `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகிருக்கு. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைச்சிருக்காரு. இந்த படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகருக்கு. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்தின் அடுத்த 3 படத்தை தயாரிக்க இருப்பதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தி பரவியதை தொடர்ந்து இது வதந்தி என்று போனி கபூர் அவரோட twitter page"ல விளக்கம் குடுத்துருக்காரு.  அதில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து தான் ஒரு ஆக்க்ஷன் படத்தை தயாரிப்பதாகவும், அவரை வைத்து ஹிந்தியில் ஒரு படம் தயாரிக்க விரும்புவதாகவும், அதற்கு அஜித் இன்னும் பதில் அளிக்க வில்லை என்றும் அந்த டீவீட்டில் போனி கபூர் தெரிவிச்சுருக்காரு.

News Counter: 
100
Loading...

Padhmanaban