இணையதளத்தை கலக்கும் அஜித் மகனின் புகைப்படங்கள்..!!

share on:
Classic

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் புதிய புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். அஜித் - ஷாலினி தம்பதி, தங்களது குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து வருவதில்லை. தங்களது புகழ் குழந்தைகளின் மீதும் பரவக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

ஆனாலும், அவ்வப்போது ஷாப்பிங் செல்லும் இடம், விமான நிலையம் என அஜித்தின் குடும்பப் புகைப்படம் வெளியாகி விடுகிறது. எளிமையை விரும்பும் அஜித், செல்ஃபி எடுக்க வரும் ரசிகர்களுக்கு மறுப்பு சொல்வதில்லை! அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெலியிட்டு அதை வைரலாக்கி வருகின்றனர்.  

அஜித்தைப் போலவே மகன் ஆத்விக்கிற்கும் ஒரு ரசிகர் வட்டம் உள்ளது. எப்போதெல்லாம் அவரது புகைப்படம் வெளியாகிறதோ, அப்போதெல்லாம் அதனை வைரலாக்கி விடுகின்றனர், அஜித் ரசிகர்கள். சமீபத்தில் ஷாலினியுடன் ஷாப்பிங் சென்ற போது எடுக்கப்பட்ட ஆத்விக்கின் புகைப்படங்கள் வைரலானது. 

இந்த நிலையில் தற்போது, ஆத்விக்கின் இரண்டு புதிய புகைப்படங்கள் வெளிவந்து இணைய தளங்களை கலக்கி கொண்டிருக்கிறது. அதில் ஆத்விக், விமானி போல உடை அணிந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆத்விக்கின் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை எனக் கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan