close
முகப்புஉலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவின் அகில் தங்கப்பதக்கம் வென்றார்

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவின் அகில் தங்கப்பதக்கம் வென்றார்

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல்: இந்தியாவின் அகில் தங்கப்பதக்கம் வென்றார்

மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் அகில் ஷெரான் தங்கப்பதக்கம் வென்றார்.

மெக்சிகோவின் கவுடலஜாரா (Guadalajara) நகரில் சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில், ஆடவருக்கான 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் 455 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் அகில் ஷெரான் தங்கப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் ஆஸ்திரிய வீரர் பெர்னார்ட் வெள்ளிப் பதக்கத்தையும், ஹங்கேரியை சேர்ந்த இஸ்த்வன் பென்னி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இந்த பதக்கத்தையும் சேர்ந்து உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.