ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக நருஹிடோ பதவியேற்பு..!

share on:
Classic

ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக அகிஹிடோவின் மகன் நருஹிடோ இன்று பதவியேற்றார்.

ஜப்பான் நாட்டின் மன்னர் அகிஹிட்டோ வயது மூப்பு காரணமாக ஒய்வு பெற்றார். இந்நிலையில், தலைநகர் டோக்கியோவில் உள்ள அரச மாளிகையில் அரச பதவி துறப்பதற்கான பணிகள் நேற்று நடைபெற்றன. இந்த விழாவில் பேசிய அகிஹிடோ, தனது பிரிவுரையின் போது, ஜப்பான் மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார். இதனையடுத்து, அவரது மகனும், பட்டத்து இளவரசருமான நருஹிடோவின் முடிசூட்டு விழா, டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. புதிய மன்னரின் பதவியேற்பைத் தொடர்ந்து அந்நாட்டில் 10 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan