வீடுகளில் பதுக்கி மது விற்பனை..!

share on:
Classic

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் வீடுகளில் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜாகிர் அம்மாபாளையத்தில் சிலர் கள்ளத்தனமாக வீடுகளில் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே மதுவிற்பனை நடைபெறுவதால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக பெண்கள் புகார் தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

vinoth