AN-32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழப்பா..?

share on:
Classic

ஏஎன்- 32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக, இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் கடந்த 3ம் தேதி அருணாசலப் பிரதேசத்துக்கு புறப்பட்டது. புறப்பட்ட அரை மணி நேரத்தில், இந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு விமானத்தின் பாகங்களை நேற்று முன் தினம் அருணாசலப் பிரதேச மாநிலம் லிபோ என்ற இடத்திற்கு 16 கிலோ மீட்டர் வடக்கே கண்டெடுக்கப்பட்டது. 

தொடர்ந்து, இதில் பயணித்த 13 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்த நிலையில், விமானத்தில் பயணித்த 13 வீரர்களும் உயிரிழந்ததாக, இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது. அதேபோல் இறந்த 13 வீரர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய விமானப்படை துணை நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind