பாஜகவின் அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று கூட்டம்..!

share on:
Classic

பாஜக அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டமானது, பாஜகவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடக்க உள்ளது. பாஜக தேசிய தலைவராக பொறுப்பு வகித்த அமித்ஷாவிற்கு, உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கட்சியின் விதிப்படி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதுகுறித்த ஆலோசிக்க பாஜக அனைத்து மாநில தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், தேசிய நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலில் மேற்கொண்ட பணிகள் குறித்து மாநிலம் வாரியாக கேட்டறிய உள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan