"தபால் தேர்வு தமிழில் எழுத அனுமதிக்கப்பட்டது திமுகவுக்கான வெற்றி அல்ல"

share on:
Classic

தபால் தேர்வு தமிழில் எழுத அனுமதிக்கப்பட்டது திமுகவுக்கான வெற்றி அல்ல என்றும், தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு தெரிவித்துள்ளார்.

சட்டபேரவையில் மானிய கோரிக்கை விவாத்தில் பேசிய திமுக உறுப்பினர் ரவிச்சந்திரன், திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதால் தமிழ் மொழியில் நடத்தப்படாத தபால் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கூறினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தபால்துறை தேர்வு தொடர்பாக ராஜ்யசபாவில் அதிமுக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து அழுத்தம் கொடுத்ததை குறிப்பிடவேண்டும் என கூறினார். 

அதை தொடர்ந்து பேசிய அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் இருந்து கட்சி பாகுபாடின்றி அனைவரும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், இது தமிழகத்திற்கான வெற்றி எனவும் தெரிவித்தார். 

 

News Counter: 
100
Loading...

aravind